ADDED : டிச 03, 2024 08:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த, தண்டரை பகுதியைச் சேர்ந்த தனராஜ் மகன் சஞ்சீவ் செல்வகுமார், 45. பெயின்டரான இவர், நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை.
நேற்று காலை 5:00 மணிக்கு, பெரிய இரும்பேடு தரைப்பாலத்தில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி, தலை நசுங்கி இறந்து கிடந்தார். இதுகுறித்து, அவரது மனைவி கீதாமேரி, நேற்று அளித்த புகாரின்படி, திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.