/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
/
மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
ADDED : ஏப் 09, 2025 10:21 PM
சிட்லப்பாக்கம்:குரோம்பேட்டை, ராதா நகர், எஸ்.சி.எஸ்., என்கிளவ் பகுதியை சேர்ந்தவர் கிஷோர், 25. துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில், இன்டீரியர் டிசைன் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, குரோம்பேட்டை, பார்டர் சாலையில் உள்ள ஜாம் ஜாம் அடுக்குமாடி குடியிருப்பின், இரண்டாவது மாடியில், நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார்.
அப்போது, கிஷோர் நிதானம் இன்றி, கால் தடுமாறி, தவறி கீழே விழுந்தார். அவரது நண்பர்கள், 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து, கிஷோரை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், கிஷோர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சிட்லப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

