/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெண் பலாத்கார வழக்கு வாலிபருக்கு 7 ஆண்டு சிறை
/
பெண் பலாத்கார வழக்கு வாலிபருக்கு 7 ஆண்டு சிறை
ADDED : டிச 13, 2024 02:14 AM

செங்கல்பட்டு:இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், வாலிபருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், இருவரை விடுதலை செய்தும், செங்கல்பட்டு மகிளா கோர்ட், நேற்று தீர்ப்பளித்தது.
மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
இதே நிறுவனத்தில் மதுராந்தகம், மோச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ், 32, என்பவர், 2015 செப்., 17ம் தேதி, இளம்பெண்ணை காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பலாத்காரம் செய்தார்.
பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரையடுத்து, மேல்மருவத்துார் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சின்னராஜ், அவரது தாய் சந்திரா, 62, அண்ணன் வினோத்,43, ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி எழிலரசி முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில், வழக்கறிஞர் சசிரேகா ஆஜரானார்.
வழக்கு விசாரணை முடிந்து, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், சின்னராஜுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை, 3,000 ரூபாய் அபராதம், அபராதம் செலுத்த தவறினால், ஒரு மாதம் மெய்க்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.
சந்திரா, வினோத் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், அவர்களை விடுதலை செய்து, நீதிபதி எழிலரசி, நேற்று தீர்ப்பளித்தார்.