sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இ.சி.ஆர்., விரிவாக்க பணிகளுக்கு... கெடு! இரு மாதங்களில் முடிக்க கண்டிப்பு

/

இ.சி.ஆர்., விரிவாக்க பணிகளுக்கு... கெடு! இரு மாதங்களில் முடிக்க கண்டிப்பு

இ.சி.ஆர்., விரிவாக்க பணிகளுக்கு... கெடு! இரு மாதங்களில் முடிக்க கண்டிப்பு

இ.சி.ஆர்., விரிவாக்க பணிகளுக்கு... கெடு! இரு மாதங்களில் முடிக்க கண்டிப்பு


ADDED : செப் 11, 2024 11:51 PM

Google News

ADDED : செப் 11, 2024 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : கிழக்கு கடற்கரை சாலையில், அக்கரை - திருவான்மியூர் வரையிலான விரிவாக்க பணிகள், மந்தகதியில் நடப்பதால் கடும் அதிருப்தி வெடித்துள்ளது. இதையடுத்து, அவசர கூட்டம் நடத்திய அமைச்சர் வேலு, இரு மாதங்களுக்குள் பணிகளை முடிக்க, துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை - புதுச்சேரி இடையே, இ.சி.ஆர்., எனும் கிழக்கு கடற்கரை சாலை 135 கி.மீ., நீளம் உடையது.

இந்த சாலை, 1991ல் மூன்று அடி அகலம் இருந்தது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, பாதுகாப்பு துறையின் தேவைக்காக, 1991 - 95 இடையிலான காலக்கட்டத்தில், இச்சாலை இருவழியாக விரிவாக்கம் செய்யப்பட்டது.

பின், அக்கரை முதல் மாமல்லபுரம் வரை இச்சாலையை, மாநில நெடுஞ்சாலைத் துறை நான்கு வழியாக விரிவாக்கம் செய்துள்ளது.

இந்நிலையில், மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரை, ஆறு வழியாக விரிவாக்கம் செய்யும் பணி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக நடந்து வருகிறது.

நெரிசல்


இதற்காக, திருவான்மியூர் முதல் அக்கரை வரை, சாலையை விரிவாக்கம் செய்யவும் நெடுஞ்சாலைத் துறையால் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 11.4 கி.மீ.,க்கு சாலையை விரிவாக்கம் செய்வதற்கு 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

விரிவாக்க பணி முடியாததால், திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், வெட்டுவாங்கேனி, ஈஞ்சம்பாக்கம், அக்கரை உள்ளிட்ட இடங்களில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தவிர, அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன.

சாலை விரிவாக்க பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதால், வாகன ஓட்டிகள், அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைகின்றனர்.

இது குறித்து அறிந்த நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு, சாலை, அதை சார்ந்த பணிகளில் தொடர்புடைய துறைகளின் அதிகாரிகளை அழைத்து, தலைமை செயலகத்தில் நேற்று, ஆய்வு நடத்தினார்.

சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, நெடுஞ்சாலைத் துறை செயலர் செல்வராஜ், பெருநகர சாலைகள் பிரிவு தலைமை பொறியாளர் ஜவஹர் முத்துராஜ், சென்னை குடிநீர் வாரிய தலைமை பொறியாளர் கண்ணன், நில எடுப்பு வருவாய் அலுவலர் விஜயராஜ், மின் வாரிய செயற்பொறியாளர் ராமு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, நெடுஞ்சாலை துறையினர், திருவான்மியூர் - அக்கரை சாலை விரிவாக்க பணிகளை முடிப்பதில், கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தனர்.

இடையூறு


ஆனால், நில எடுப்பு பணப்பட்டுவாடா பணிகளில், வருவாய் துறையினர் உரிய கவனம் செலுத்தவில்லை.

அதேபோல், சென்னை குடிநீர் வாரிய குழாய்கள், மின் வாரியத்தின் வடங்கள், மின்மாற்றிகள், மின்கம்பங்களை மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் தாமதமாகி வருவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து கூட்டத்தில், அமைச்சர் வேலு பேசியதாவது:

கொட்டிவாக்கத்தில் 270 மீட்டர் நீளத்திற்கு குடிநீர் குழாய், பாதாள சாக்கடை பணிகள் நிலுவையில் உள்ளன. இப்பணியில் சென்னை குடிநீர் வாரியம் தனி கவனம் செலுத்த வேண்டும்.

பாதாள சாக்கடை துளையிடும் போது, நெடுஞ்சாலை துறையினருடன் ஆலோசனை பெற வேண்டும். சாலை பணிக்கு 2.75 கி.மீ., நில எடுப்பு பணி நிலுவையில் உள்ளது. மின்சார பெட்டிகள், நிலத்திற்கடியில் வடங்கள் மாற்றாததால், சாலை பணிக்கு இடையூறு ஏற்பட்டு உள்ளது.

கொட்டி வாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லுார் ஆகிய இடங்களில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும்.

இப்பணிகளை முடித்தால் மட்டுமே, சாலை பணிகளை வேகப்படுத்த முடியும். அதனால், தொடர்புடைய அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகளை, இரு மாதங்களில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சரக்கு வாகனங்கள், பேருந்து, கார்: 100 அடி அகலம். இதில் ஒரு பகுதி 36 அடி அகலத்தில், மூன்று வழி பிரதான சாலை அமைக்கப்படும்.

இருசக்கர வாகனங்கள் செல்ல 5.4 அடி அகலத்திற்கு சிமென்ட் கற்களில் சாலை

மழைநீர் மூடுகால்வாய், அதன் மீது நடைபாதை: 6.5 அடி அகலம்

மீடியன்: 1.20 மீட்டர் அகலம்; மின்விளக்குகள், பூச்செடிகள் நடவு செய்யப்பட உள்ளன.

-

* இச்சாலை பணிகள் முடிந்ததும், திருவான்மியூர் - அக்கரை இடையே, உயர்மட்ட மேம்பால சாலையும் நெடுஞ்சாலை துறையால் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகள் முடிந்தால், 15 நிமிடங்களில் இப்பகுதியை வாகனங்கள் கடந்து செல்ல முடியும்.

-

தற்போது, சென்னையில் இருந்து புதுச்சேரி செல்வதற்கு 2.30 மணி நேரம் ஆகிறது. இதில், ஒரு மணி நேரத்திற்கு மேல் திருவான்மியூரில் இருந்து அக்கரையை அடைவதற்கு நேரம் விரயமாகிறது.

சாலை பணிகள் முழுமையாக முடிந்தால், 1.30 மணி நேரத்திற்குள் புதுச்சேரியை அடைய முடியும்.

நிலுவைக்குகாரணம் என்ன?

சேவை பணிகளால் பாதிப்பு: இ.சி.ஆர்., விரிவாக்க திட்டத்தில் மொத்தமுள்ள 11.4 கி.மீ., சாலையில், 2.75 கி.மீ., நில எடுப்பு காரணமாகவும், 7.23 கி.மீ., மின் சாதனங்கள், கேபிள்கள் மாற்றி அமைக்கும் பணிகள், பாதாள சாக்கடை பணிகள் காரணமாகவும் நிலுவையில் உள்ளது. மேலும் 1.46 கி.மீ., குடிநீர் குழாய் அமைப்பதன் காரணமாகவும் பணிகள் நிலுவையில் உள்ளன.

அவகாசம் கேட்பு: மின் சாதனங்களை மாற்றி அமைக்கும் பணிக்கு கொட்டிவாக்கம், சோழிங்கநல்லுார், மற்றும் பாலவாக்கத்தில் இம்மாதம் 30 வரையும், நீலாங்கரையில் அக்., 15 வரையும், ஈஞ்சம்பாக்கத்தில் டிச., 31ம் தேதி வரையும், மின் வாரியம் அவகாசம் கேட்டுள்ளது. இதுவும், விரிவாக்க பணிகள் இழுபறிக்கு காரணம்.

இழுபறி நீடிப்பு: நீலாங்கரையில் ஆறு இடங்கள், ஈஞ்சம்பாக்கத்தில் 14 இடங்களில் பட்டா நிலங்களை கையகப்படுத்த வேண்டியுள்ளது. நில எடுப்பு பணியில் அவை விடுபட்டுள்ளதால், இழுபறி நீடிக்கிறது. சாலை பணிக்கு, அரசு புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்த நில நிர்வாக ஆணையர் வாயிலாக சென்னை மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டு பணிகள் நிலுவையில் உள்ளன.

நீதிமன்ற வழக்கு: சாலை விரிவாக்கம் தொடர்பாக 14 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதில், ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் அடங்கும். நிலம் கொடுத்தவர்களுக்கு, இழப்பீட்டு தொகையாக, 40.6 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

தவறுதலாக வழங்கிய

ரூ.2.27 கோடி இழப்பீடு!

சாலை பணிக்கு 836 பட்டாதாரர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். இதுவரை 746 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 90 பேர் இழப்பீட்டிற்கு காத்திருக்கின்றனர்.

சாலை பணிக்கு நிலம் தந்ததாக கூறி, நரசிம்மன் என்பவருக்கு தவறுதலாக இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு உள்ளது. அவரிடம் இருந்து முதல் தவணையாக, 1.07 கோடி ரூபாயும், இரண்டாம் தவணையாக 1.20 கோடி ரூபாயும் மீட்கப்பட்டு, அரசு கணக்கில் சேர்க்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us