/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடற்கரையில் துாங்கியோரிடம் திருடிய 2 பேர் கைது
/
கடற்கரையில் துாங்கியோரிடம் திருடிய 2 பேர் கைது
ADDED : ஆக 13, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாஸ்திரி நகர், தஞ்சாவூரைச் சேர்ந்தவர் லியோன்ராஜ், 28. கடந்த 10ம் தேதி இவர், குடும்பத்துடன் பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு சென்றார்.
இரவு அதிக நேரமானதால், பெசன்ட் நகர் கடற்கரை மணலில் துாங்கினர். மறுநாள் அதிகாலையில், இவர்களது, மூன்று மொபைல் போன்கள், ஒரு புளூடூத், ஒரு ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றை, இரண்டு பேர் திருடிச் சென்றனர்.
சாஸ்திரி நகர் போலீசார் விசாரணையில், பெசன்ட் நகர், ஊரூர் குப்பத்தைச் சேர்ந்த தினேஷ், 23, முரசொலி மாறன், 23, என தெரிந்தது.
நேற்று, இருவரையும் கைது செய்த போலீசார், திருடிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.

