/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குவாரியில் மூழ்கி மாணவர்கள் 3 பேர் மாயம்
/
குவாரியில் மூழ்கி மாணவர்கள் 3 பேர் மாயம்
ADDED : மே 02, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட 10 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட கல் குவாரி குட்டை உள்ளது. இங்கு, நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி அடுத்துள்ள தனியார் பொறியியல் கல்லுாரி மாணவர்கள் ஐந்து பேர் நேற்று இரவு 7:00 மணியளவில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, மூவர் திடீரென மாயமாகினர்.
அவர்கள், திருப்பூரைச் சேர்ந்த தீபக் சாரதி, 20, தஞ்சையைச் சேர்ந்த முகமது இஸ்மாயில், 19, தர்மபுரியைச் சேர்ந்த விஜய்சாரதி, 19. காயாறு போலீசார், மறைமலை நகர் தீயணைப்பு துறையினருடன் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

