/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏர்போர்ட்டில் 30 பேருக்கு அபராதம்
/
ஏர்போர்ட்டில் 30 பேருக்கு அபராதம்
ADDED : செப் 11, 2024 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சென்னைக்கு நேற்று அதிகாலை தனியார் பயணியர் விமானம் வந்தது. அதில் வந்திருந்த பயணியரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில், சிலர், விலை உயர்ந்த மொபைல் போன், மதுபாட்டில்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் எடுத்து வந்தது தெரிய வந்தது.
அவ்வாறு எடுத்துவரப்படும் பொருட்களுக்கு வரிசெலுத்த வேண்டும். இப்படி, 30 பயணியர் சுங்க வரி செலுத்தாமல் பொருட்களை எடுத்து வந்துள்ளனர். அவற்றை கணக்கிட்டு அதிகாரிகள் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.