ADDED : ஆக 29, 2024 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆலந்துார், வடபழனி பகுதியில், கைப்பையுடன் சுற்றி வந்த நபரை, மவுன்ட் மதுவிலக்கு போலீசார் சோதனையிட்டனர். அவரிடம் 3 கிலோ கஞ்சா கண்டறியப்பட்டது.
விசாரணையில் அவர், திரிபுரா, மட்டர்பரியைச் சேர்ந்த அகேஷ்தேப்நாத், 19, என்பது தெரியவந்தது.
அவரை தொடர்ந்து, அமைந்தகரை எம்.எம்.காலனி பகுதியில் கஞ்சா விற்ற, அகேஷ் நண்பர் முஷராப் ஹாசின், 25, என்பவரையும் பிடித்தனர். அவரிடம் 2 கிலோ கஞ்சா பிடிபட்டது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

