ADDED : ஜூன் 30, 2024 12:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிக்கரணை, நெம்மேலி, தந்தை பெரியார் நகர், ஜெயலலிதா தெருவை சேர்ந்தவர் பாத்திமா,45; துாய்மை பணியாளர்.
சென்னை மாநகராட்சியின் 14வது மண்டலத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று அதிகாலை துரைப்பாக்கம்- பல்லாவரம் ரேடியல் சாலை, விடுதலை நகர் அருகே தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி நிற்காமல் சென்றது. இதில், பாத்திமா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

