/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பானிபூரி கடையில் சிறுவர்கள் கைவரிசை
/
பானிபூரி கடையில் சிறுவர்கள் கைவரிசை
ADDED : ஆக 19, 2024 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டேரி, :கொசப்பேட்டை, சின்ன தம்பி தெருவைச் சேர்ந்தவர் சோபன் யாதவ், 30. இவர், கொசப்பேட்டை, புது தெருவில் பானி பூரி மற்றும் சாண்ட்விச் கடை நடத்தி வருகிறார்.
நேற்று மதியம் வழக்கம்போல், வியாபாரம் முடிந்து கடையை பூட்டி வீட்டிற்கு வந்து உள்ளார். அப்போது, அவரது கடையில் நுழைந்த மர்ம நபர்கள், 6,000 ரூபாயை திருடியுள்ளனர்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர், அவர்களை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், ஓட்டேரியைச் சேர்ந்த 16 - 15 வயது சிறுவர்கள் என தெரிந்தது. ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

