/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உருட்டுக்கட்டையுடன் வந்து மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி
/
உருட்டுக்கட்டையுடன் வந்து மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி
உருட்டுக்கட்டையுடன் வந்து மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி
உருட்டுக்கட்டையுடன் வந்து மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி
ADDED : ஆக 23, 2024 12:31 AM

திருமங்கலம், வில்லிவாக்கம் அடுத்த கம்பர் காலனியில், மாரியப்பன் என்பவரின் சூப்பர் மார்க்கெட் கடை உள்ளது. கடந்த 20ம் தேதி கடைக்கு உருட்டு கட்டையுடன் வந்த வாலிபர், 'தான் ரவுடி எனவும், தீபாவளி வருவதால், 5,000 ரூபாய் மாமூல் தர வேண்டும். இல்லையேனில், கடையை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுவேன்' என, ஒரு கையில் கட்டையும், மறுகையில் சிகரெட் பிடித்தபடியும் மிரட்டியுள்ளார்.
இந்த சம்பவத்தை, கடையின் ஊழியர்கள் 'வீடியோ'வாக எடுத்து, நேற்று இணையத்தில் வெளியிட்டனர். திருமங்கலம் போலீசாரின் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த பழைய குற்றவாளியான ரவுடி விக்கி என்பதும், சமீபத்தில் போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து வெளிவந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரை நேற்று இரவு கைது செய்தனர்.