/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்சார ரயில் மோதி வாலிபர், மூதாட்டி பலி
/
மின்சார ரயில் மோதி வாலிபர், மூதாட்டி பலி
ADDED : ஜூலை 12, 2024 12:25 AM
திருவொற்றியூர், எண்ணுார், அன்னை சிவகாமி நகர், முதலாவது தெருவைச் சேர்ந்தவர் ரவீந்தர், 37, தனியார் நிறுவனத்தில் கூலி வேலை பார்த்து வந்தார்.
இவர், நேற்று முன்தினம் இரவு, விம்கோ நகர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, மின்சார ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
கொருக்குப்பேட்டை, ஜே.ஜே., நகரைச் சேர்ந்தவர் சந்திரமதி, 63, நேற்று முன்தினம் இரவு, உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக, கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே, ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, மின்சார ரயில் மோதி, சந்திரமதி பலியானார்.
வாலிபர் மற்றும் மூதாட்டியின் உடலை மீட்டு, கொருக்குபேட்டை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

