/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாய்களை திரிய விட்டால் உரிமையாளர் மீது நடவடிக்கை
/
நாய்களை திரிய விட்டால் உரிமையாளர் மீது நடவடிக்கை
ADDED : மே 08, 2024 12:09 AM
சென்னை, 'நாய்களை பொது இடங்களில் திரிய விட்டால், உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என, சென்னை மாநாகராட்சி எச்சரித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையிலுள்ள மாநகராட்சி பூங்காவில் தங்கி பணிபுரியும் காவலாளி ரகுவின் 5 வயது மகள் சுரக் ஷாவை, இரண்டு ராட்வைலர் ரக நாய்கள் கடித்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆபத்தான நாயான 'ராட்வைலரை' சங்கிலியால் கட்டாமல் பூங்காவில் திரியவிட்ட உரிமையாளர் புகழேந்தி, 63, என்பவரை ஆயிரம் விளக்கு போலீசார் கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர்.
கூடுதல் தலைமை செயலர் ராதாகிருஷ்ணன், சிறுமியை சந்தித்து ஆறுதல் கூறினார்.
செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள், கட்டாயம் மாநகராட்சியிடம் உரிமம் பெற வேண்டும். தடுப்புசி செலுத்த வேண்டும். அச்சமூட்டும் நாய்களை வெளியே கொண்டு செல்லும் போது, கழுத்து பட்டையுடன் சங்கிலி மற்றும் முகமூடி அணிவித்து கொண்டுசெல்ல வேண்டும்.
நாய்களின் உரிமையாளர் மீது, 1913 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்திய பிராணிகள் நல வாரியம் வெளியிட்டுள்ள விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
ஆபத்து விளைவிக்கும் வகையில் நாய்கள் மற்றும் செல்லப் பிராணிகளை தெருக்கள், பூங்காக்கள், பொது இடங்களில் கட்டுப்பாடுகளின்றி திரிய விட்டால், உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

