/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துப்பாக்கியால் மிரட்டல் அப்பார்ட்மென்ட் நிர்வாகி, காவலாளி கைது
/
துப்பாக்கியால் மிரட்டல் அப்பார்ட்மென்ட் நிர்வாகி, காவலாளி கைது
துப்பாக்கியால் மிரட்டல் அப்பார்ட்மென்ட் நிர்வாகி, காவலாளி கைது
துப்பாக்கியால் மிரட்டல் அப்பார்ட்மென்ட் நிர்வாகி, காவலாளி கைது
UPDATED : மே 23, 2024 05:34 AM
ADDED : மே 23, 2024 12:25 AM
ஓட்டேரி, ஓட்டேரியில் உள்ள நார்த் டவுன் அடுக்குமாடி குடியிருப்பில் 1,750 வீடுகள் உள்ளன. இங்கு 6,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இங்குள்ள ஆண்டர்வா அசோசியேஷன் நிர்வாகி பரத்பாலர் என்பவர், அரசு அனுமதியின்றி துப்பாக்கி ஏந்திய காவலாளி ஒருவரை பணியமர்த்தியுள்ளார். குடியிருப்புவாசிகளை மிரட்டும் வகையில் காவலாளி நடவடிக்கை இருந்துள்ளது. இது குறித்து ஓட்டேரி போலீசில் குடியிருப்புவாசிகள் புகார் அளித்தனர்.
விசாரித்த போலீசார், பரத்பாலரையும், நாகாலாந்தில் துப்பாக்கி உரிமம் பெற்றுள்ள பீஹாரைச் சேர்ந்த ராம்ஜித்சிங், 40, என்பவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில், பரத்பாலர் மீது மேலும் ஒரு புகார் உள்ளது. ராம்ஜித் சிங் வைத்துள்ள துப்பாக்கிக்கு 2028 வரை நாகாலாந்தில் பெறப்பட்ட உரிமம் உள்ளது.