/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயில்வே திட்டங்களில் அக்கறை காட்டவில்லை அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயவர்தன் குற்றச்சாட்டு
/
ரயில்வே திட்டங்களில் அக்கறை காட்டவில்லை அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயவர்தன் குற்றச்சாட்டு
ரயில்வே திட்டங்களில் அக்கறை காட்டவில்லை அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயவர்தன் குற்றச்சாட்டு
ரயில்வே திட்டங்களில் அக்கறை காட்டவில்லை அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயவர்தன் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 11, 2024 12:09 AM

சென்னை, தென்சென்னை லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் மருத்துவர் ஜெயவர்தன், வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று, இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். பெண்கள் அவருக்கு, உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, அவர் பேசியதாவது:
நான் எம்.பி.,யாக இருந்தபோது, தென்சென்னையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன. ரயில்வே போலீசார் பாதுகாப்பு படையும் அதிகரிக்கப்பட்டது.
தவிர, ரயில் நிலையங்கள் அனைத்திலும் கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டன.
சைதாப்பேட்டை, கிண்டி, மாம்பலம், கோடம்பாக்கம், பரங்கிமலை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க, ரயிலில் இருந்து பயணியர் இறங்கி நடக்கும் வகையில், இருபுறமும் நடைபாதை அமைக்க, லோக்சபாவில் வலியுறுத்தினேன். இதற்காக, ரயில்வே அமைச்சர், அதிகாரிகளை சந்தித்து முறையிட்டேன்.
இதனால், ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும், 8 - 9 கோடி ரூபாயில் இருபுறமும் நடைமேடைகள் அமைக்கப்பட்டன.
ஆனால், தி.மு.க., - எம்.பி., தமிழச்சி, அவரது ஐந்து ஆண்டு கால பதவியில், ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காகவும், உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்துவதற்காகவும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து லோக்சபாவில் எந்தவித குரலும் எழுப்பாததால், ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை.
மேலும், 2023, ஜூலை மாதம், சைதாப்பேட்டையில், 35 வயது பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தது. இதுகுறித்தும் எம்.பி., தமிழச்சி, லோக்சபாவில் குரல் எழுப்பவில்லை.
ரயில்வே துறை சார்ந்திருக்கும் எந்த பிரச்னைக்கும், திட்டங்களுக்கும் அக்கறை காட்டாத, நடவடிக்கை எடுக்காத எம்.பி.,யாக தமிழச்சி இருந்தார்.
தென்சென்னை தொகுதியில் குடிநீர் தேவையை பூர்த்தியும் வகையில், நான் எம்.பி.,யாக இருந்தபோது தினமும் 150 மில்லியன் லிட்டர் குடிநீர் தயாரிக்கும் ஆலையை நெமிலியில் அமைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, லோக்சபாவில் பேசினேன்.
மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரிடம் வலியுறுத்தி, 2,500 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. பொதுமக்களின் குடிநீர் பிரச்னைக்கும் தீர்வு காணப்பட்டது.
தி.மு.க., - எம்.பி., தமிழச்சி, ஐந்து ஆண்டு காலத்தில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் குறித்து லோக்சபாவில் பேசி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நான் எம்.பி., ஆனதும், தென்சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 400 மில்லியன் லிட்டர் குடிநீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

