ADDED : செப் 15, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, இந்திய விமானப்படையின் 92வது நிறுவன தினத்தை முன்னிட்டு, விமானப் படை தின தேசிய சாகச நிகழ்ச்சி, சென்னை , மெரினா கடற்கரையில் முதல்முறையாக, வரும் அக்., 6ம் தேதி காலை 11:00 மணிக்கு நடக்க உள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக, டில்லியில் மட்டுமே நடந்து வந்த விமானப்படை தின தேசிய நிகழ்ச்சி, தற்போது முதல் முறையாக சென்னையில் நடக்க உள்ளது.
இதில், தேஜாஸ், ரபேல், சுகோய் போன்ற விமானப்படையின் முன்னணி போர் விமானங்கள் இடம் பெறுகின்றன.