ADDED : செப் 16, 2024 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர், சினிமா துறையில் உதவி இயக்குனராக பணிபுரிகிறார். இவர், கடந்த 11ம் தேதி நள்ளிரவு பணி முடிந்து, அசோக் நகர் வீராசாமி தெரு வழியாக பைக்கில் வீட்டிற்கு சென்றார்.
அவரை பைக்கில் தொடர்ந்து வந்த வாலிபர், பெண்ணின் உடலில் கை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பினார்.
அதே வாலிபர், மேற்கு மாம்பலத்தில் சாலையில் சென்ற 28 வயதுடைய மற்றொரு இளம் பெண்ணிடமும் சில்மிஷத்தில் ஈடுபட்டு தப்பினார்.
அசோக் நகர் போலீசாரின் விசாரணையில், அனகாபுத்துாரைச் சேர்ந்த கார் ஓட்டுனர் வெங்கடேஷ், 28, என்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு போலீசார் அவரை கைது செய்தனர்.

