/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடுக்குமாடி குடியிருப்பு செய்தி பேட்டி
/
அடுக்குமாடி குடியிருப்பு செய்தி பேட்டி
ADDED : ஆக 13, 2024 12:15 AM
குடியிருப்புகளில் பொது மின்சாரத்தில் பயன்படுத்த அனுமதிப்பதில்லை. இப்பிரச்னைக்கு தீர்வாக, பொது மின் இணைப்பில் இருந்து வசதி செய்து, அதற்கென தனி மீட்டர் பொருத்த வேண்டும். அதில், ரீடிங் அளவு கணக்கிட்டு கட்டணத்தை செலுத்த வேண்டும். இதுதான் தற்போதைக்கு சிறந்த வழி. எதிர்காலத்தில் இந்த பிரச்னை ஏற்பட வாய்ப்பு இல்லை.
எஸ்.சுரேஷ்,
கீழ்கட்டளை.
அடுக்குமாடி குடியிருப்பில், பொது பயன்பாட்டில் உள்ள மின் இணைப்பில், வாகனங்களுக்கு சார்ஜ் போட அனுமதித்தால், அனைத்து குடியிருப்புகளுக்கும் பொதுவான மின் பயன்பாடு அதிகரித்து, எல்லாரும் ஏற்க வேண்டியிருக்கும். எங்கள் குடியிருப்பில் ஒருவர் மட்டும் பேட்டரி பைக் வைத்துள்ளார். அவர் தன் வீட்டில் இருந்து வெளியில் ஒயர் போட்டு, சார்ஜ் செய்து கொள்கிறார்.
மகாதேவன்,
குரோம்பேட்டை.

