/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரக்கோணம் ரயில்கள் ரத்தால் திருவள்ளூரில் தற்காலிக நிறுத்தம்
/
அரக்கோணம் ரயில்கள் ரத்தால் திருவள்ளூரில் தற்காலிக நிறுத்தம்
அரக்கோணம் ரயில்கள் ரத்தால் திருவள்ளூரில் தற்காலிக நிறுத்தம்
அரக்கோணம் ரயில்கள் ரத்தால் திருவள்ளூரில் தற்காலிக நிறுத்தம்
ADDED : ஆக 29, 2024 12:13 AM
சென்னை, அரக்கோணம் யார்டில் மேம்பாட்டு பணி நடக்க உள்ளதால், நேற்றும், இன்றும் சென்னை - அரக்கோணம் தடத்தில் 14 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு, ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டது.
சென்னையில் இருந்து செல்லும் ரயில்கள் திருவள்ளூர் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால், அரக்கோணம் சென்று, விரைவு ரயிலை பிடிக்க முடியாமல் பயணியர் அவதிப்படுகின்றனர்.
எனவே, திருவள்ளூரில் கூடுதல் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டுமென, பயணியர் நலச்சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுத்தனர்.
குறிப்பாக, கோவை இன்டர்சிட்டி, திருவனந்தபுரம் விரைவு ரயில், கே.எஸ்.ஆர்., பெங்களூரு லால்பாக் விரைவு ரயில்கள், திருவள்ளூரில் தற்காலிகமாக நின்று செல்ல அனுமதிக்க வேண்டுமென, கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை பரிசீலித்த, தெற்கு ரயில்வே மேற்கண்ட மூன்று ரயில்களும் திருவள்ளூரில் தற்காலிகமாக நின்று செல்ல அனுமதிக்கப்பட்டது.
அதன்படி, விரைவு ரயில்கள் திருவள்ளூரில் நேற்று நின்று சென்றதால், பயணியர் ஏறி பயணம் செய்தனர். இதேபோல், இன்றும் தற்காலிகமாக நின்று செல்லும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.