/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பா.ம.க., ஆர்வம் காட்டாததால் ஸ்ரீபெரும்புதுாரில் த.மா.கா.,
/
பா.ம.க., ஆர்வம் காட்டாததால் ஸ்ரீபெரும்புதுாரில் த.மா.கா.,
பா.ம.க., ஆர்வம் காட்டாததால் ஸ்ரீபெரும்புதுாரில் த.மா.கா.,
பா.ம.க., ஆர்வம் காட்டாததால் ஸ்ரீபெரும்புதுாரில் த.மா.கா.,
ADDED : மார் 23, 2024 12:21 AM

தாம்பரம், ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், பா.ஜ., நேரிடையாக போட்டியிட ஆர்வம் காட்டியது.
மாநில துணை தலைவர் டால்பின் ஸ்ரீதர், முன்னாள் எம்.எல்.ஏ., காயத்ரி தேவி, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் வேதசுப்பிரமணியம், மாநில மருத்துவ பிரிவு துணை தலைவர் கோபி அய்யாசாமி, தொகுதி அமைப்பாளர் மீனாட்சி நித்தியசுந்தர் ஆகியோர், கட்சியின் தலைமையில் விருப்ப மனுவும் கொடுத்தனர்.
ஆனால், இத்தொகுதியை பா.ம.க.,விடம் தர பா.ஜ., முடிவு செய்திருந்தது. இந்நிலையில், இத்தொகுதி த.மா.கா.,வுக்கு ஒதுக்கப்பட்டு, அக்கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவராக உள்ள வேணுகோபால் என்பவர் போட்டியிடுகிறார்.
கட்சியினர் கூறியதாவது:
த.மா.கா., துவங்கிய காலத்தில் இருந்து, தலைவர் வாசனுடன் இருப்பவர் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் வேணு கோபால்.
கட்சி மீது அவருக்குள்ள விஸ்வாசத்திற்காக, ஸ்ரீபெரும்புதுார் தொகுதியை பா.ஜ.,விடம் பெற, வாசன் நைசாக காய் நகர்த்தி வந்தார். அதற்கேற்ப, பா.ம.க.,வும் இத்தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. இதனால், த.மா.க.,வுக்கு சீட்டு ஒதுக்கப்பட்டு, வேணுகோபால் போட்டியிடுகிறார்.
ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த இவருக்கு, ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில் 4 - 5 சதவீதம் ஓட்டுகளே உள்ளன. ஆனாலும், கூட்டணி கட்சியான பா.ம.க., ஓட்டுகளை நம்பி களமிறங்கி உள்ளார்.
கூட்டணி கட்சியினர் சேர்ந்து பணியாற்றினால், ஸ்ரீபெரும்புதுார் தொகுதியை பா.ஜ., கூட்டணி கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

