/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு
/
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : ஆக 16, 2024 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, ஆட்டோ ஓட்டுனர்களுக்கான போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, நேற்று நடந்தது.
இதில், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்த சிறந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு, கூடுதல் கமிஷனர் சுதாகர் விருதுகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், பல்வேறு சங்கத்தைச் சேர்ந்த, 600 ஆட்டோ ஓட்டுனர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், கூடுதல் கமிஷனர் சுதாகர் பேசுகையில்,''முதன் முதலில் பிரசவத்திற்கு இலவசம் என அறிவித்தது ஆட்டோ ஓட்டுனர்கள் தான். 'ஜீரோ விபத்தில்லா நாள்' விழிப்புணர்வு துவங்கி, இதுவரை ஒரு இருசக்கர வாகன ஓட்டி கூட சாலை விபத்தில் உயிரிழக்கவில்லை,'' என்றார்.