/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பின் வாசலில் வந்த திருடன் நகைகளுடன் 'எஸ்கேப்'
/
பின் வாசலில் வந்த திருடன் நகைகளுடன் 'எஸ்கேப்'
ADDED : ஆக 31, 2024 12:13 AM
சென்னை, சென்னை, கொடுங்கையூர், காந்தி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ், 35. இவரது மனைவி, ரேவதி 32. இரு தினங்களுக்கு முன், சேலத்தில் உள்ள உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்று வந்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, ரேவதி தன் நெக்லஸ், கம்மல், செயின் உள்ளிட்ட 4 சவரன் நகைகளை, மேஜை மீது வைத்துள்ளார். வீட்டின் பின் பக்க கதவை பூட்டாமல் துாங்கிய நிலையில், அதிகாலை சத்தம் கேட்டு உள்ளது. எழுந்து பார்த்தபோது, மர்ம நபர் ஒருவர் பின்பக்க வாசல் வழியாக ஓடுவது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்தவர்கள் வீட்டினுள் பார்த்தபோது, மேஜையில் இருந்த 4 சவரன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.