/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கம்பத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
/
கம்பத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
ADDED : ஆக 25, 2024 12:34 AM

திருவொற்றியூர்,
மணலிபுதுநகரைச் சேர்ந்தவர் ரவிசங்கர் பாபு, 32. இவர், அதே பகுதியில், கோழி இறைச்சி விற்பனை செய்து வந்தார். இவருக்கு கோமதி என்ற மனைவியும், ஒரு மகள், மகன் உள்ளனர்.
திருவொற்றியூரில் உள்ள தன் தாய் வீட்டிற்கு சென்றிருந்த மனைவி, குழந்தைகளை அழைத்து வருவதற்காக, ரவிசங்கர் பாபு நேற்று முன்தினம் இரவு பைக்கில் சென்றார்.
மணலி - எம்.ஜி.ஆர்., நகர், பகிங்ஹாம் மேம்பாலம் அருகே சென்ற போது, திடீரென பைக் நிலை தடுமாறி, தெருவிளக்கு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், ரவிசங்கருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அங்கிருந்தவர்கள், 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு, ரவிசங்கர் பாபு உயிரிழந்தார். இது குறித்து, செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

