/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சோழிங்கநல்லுாரில் ஆகாயத்தாமரை கால்வாயில் நீரோட்டத்திற்கு தடை
/
சோழிங்கநல்லுாரில் ஆகாயத்தாமரை கால்வாயில் நீரோட்டத்திற்கு தடை
சோழிங்கநல்லுாரில் ஆகாயத்தாமரை கால்வாயில் நீரோட்டத்திற்கு தடை
சோழிங்கநல்லுாரில் ஆகாயத்தாமரை கால்வாயில் நீரோட்டத்திற்கு தடை
ADDED : ஆக 20, 2024 12:51 AM

சோழிங்கநல்லுார், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை, பகிங்ஹாம் கால்வாய் 15 கி.மீ., நீளம் உடையது. இடத்தை பொறுத்து, 150 முதல் 600 அடி வரை அகலம் உள்ளது.
வேளச்சேரி, தரமணி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், தாழம்பூர், சேலையூர், நாவலுார் உள்ளிட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், பகிங்ஹாம் கால்வாய் வழியாக, முட்டுக்காடு கடலில் கலக்கிறது.
கால்வாயில் நீரோட்டம் சீராக இருந்தால் தான், குடியிருப்பு பகுதிகளில் ஏற்படும் வெள்ள பாதிப்பு தடுக்கப்படும்.
ஆனால், கால்வாயில் 2 கி.மீ., துாரத்தில் ஆகாய தாமரை படர்ந்துள்ளது. இதோடு, குப்பையும் சேர்வதால், நீரோட்டம் தடை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, நீலாங்கரை, வெட்டுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கம், அக்கரை, உத்தண்டி பகுதியில் அடர்த்தியாக ஆகாய தாமரை படர்ந்துள்ளது. இதை அகற்ற, ஒரு இயந்திரம் இறக்கப்பட்டு உள்ளது. ஆனால், கண்ணுக்கு எட்டும் துாரம் வரை படர்ந்துள்ள ஆகாயத் தாமரை செடியை, ஒரு இயந்திரத்தால் அகற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர்.
கூடுதல் இயந்திரம் இறக்கி, நீரோட்டம் சீராக செல்லும் வகையில், ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும் என, சோழிங்கநல்லுார் தொகுதி நலச்சங்கங்கள் கோரிக்கை விடுத்தனர்.

