/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணை தற்கொலைக்கு துாண்டிய காதலன் கைது
/
பெண்ணை தற்கொலைக்கு துாண்டிய காதலன் கைது
ADDED : ஆக 02, 2024 12:13 AM
ராமாபுரம், ராமாபுரம் பாரதி சாலை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் மணிகண்டன், 24. இவர், தண்டையார்பேட்டையை சேர்ந்த ஸ்ரீசா, 20, என்ற பெண்ணை காதலித்தார்.
மணிகண்டன் வீட்டில் தங்கியிருந்த ஸ்ரீசா, கடந்த 31ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராமாபுரம் போலீசார் விசாரித்தனர்.
இதில், கடந்த 30ம் தேதி மணிகண்டன், வீட்டருகே நண்பர்களுடன் 'பார்ட்டி' நடத்தியுள்ளார்.
அப்போது, மற்றொரு பெண்ணிடம் அவர் பேசியதால், ஸ்ரீசா தகராறு செய்துள்ளார். ஆத்திரமடைந்த மணிகண்டன், ஸ்ரீசாவை தாக்கியுள்ளார். இந்த விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
தற்கொலைக்கு துாண்டியதாக வழக்கு பதிந்து, மணிகண்டனை போலீசார் நேற்று கைது செய்தனர்.