/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிரேயர் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் பர்பில் பிளேசர்ஸ் 'சாம்பியன்'
/
பிரேயர் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் பர்பில் பிளேசர்ஸ் 'சாம்பியன்'
பிரேயர் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் பர்பில் பிளேசர்ஸ் 'சாம்பியன்'
பிரேயர் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் பர்பில் பிளேசர்ஸ் 'சாம்பியன்'
ADDED : ஜூலை 12, 2024 12:46 AM

சென்னை, டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், 'பிரேயர்' கோப்பைக்கான மகளிர் ஒரு நாள் லீக் கிரிக்கெட் போட்டி, இம்மாதம் 1ல் துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
அனைத்து லீக் போட்டிகளும், தரமணி மற்றும் செங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் விளையாட்டு மைதானங்களில் நடந்தன.
அனைத்து போட்டிகள் முடிவில், பர்பில் பிளேசர்ஸ் - பிங்க் வாரியர்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
அந்த வகையில், 50 ஓவருக்கான இறுதி போட்டி, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், நேற்று முன்தினம் மாலை நடந்தது.
முதலில் பேட் செய்த, பிங்க் வாரியர்ஸ் அணி, 47.3 ஓவர்களில் ஆல் ஆவுட் ஆகி, 164 ரன்களை அடித்தது. அடுத்து களமிறங்கிய, பர்பில் பிளேசர்ஸ் அணி, 41.1 ஓவர்களில், மூன்று விக்கெட் இழந்து, 166 ரன்களை அடித்தது.
அணியின் வீராங்கனை சுஷாந்திகா, 119 பந்துகளில் 10 பவுண்டரியுடன் ஆட்டமிழக்காமல் 92 ரன்களை அடித்து, போட்டியின் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.
இதனால், ஏழு விக்கெட் வித்தியாசத்தில் பர்பில் பிளேசர்ஸ் அணி வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை வென்றது.
ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் ஆட்ட நாயகியாக, எல்லோ சேலஞ்சர்ஸ் அணி அனுராகினி, சிறந்த பந்து வீச்சாளர் ரெட் டேஞ்சர்ஸ் ஸ்ரீநிதி, சிறந்த ஆல்ரவுண்டர் பர்பில் பிளேசர்ஸ் கீர்த்தனா, போட்டியின் நம்பிக்கைக்குரிய வீராங்கனையாக பிங்க் வாரியர்ஸ் ஸ்ரீநிதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

