/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பூனையை கடித்த நாயின் உரிமையாளர் மீது வழக்கு
/
பூனையை கடித்த நாயின் உரிமையாளர் மீது வழக்கு
ADDED : மே 25, 2024 01:22 AM
நுங்கம்பாக்கம், நுங்கம்பாக்கம், தெற்குமாட வீதியைச் சேர்ந்தவர் கருணாகரன், 68; அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவர், மனைவியின் உறவுக்கார 15 வயது சிறுமியை தத்தெடுத்து வளர்க்கிறார்.
நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியைச் சேர்ந்த ஜெயா, அவர்களின் இரு மகன்கள், தலா ஒரு நாயை நடைபயிற்சிக்கு அழைத்து சென்றனர்.
இதில் ஒரு நாட்டு நாயான சிப்பிபாறை, அங்கு திரிந்த கருணாகரன் வீட்டு பூனையை துரத்திச் சென்றது. பீதியில் ஓடிய அந்த பூனை, பெட்டிக்கடையில் புகுந்துவிட்டது.
அந்த நாயும் கடையில் புகுந்து, அங்கிருந் 15 வயது சிறுமியை கடிப்பதுபோல் சென்று அச்சுறுத்தியது. பின், பூனையை கடித்தது. வீட்டிலிருந்தோர் நாயை துரத்தினர்.
படுகாயமடைந்த பூனையை, கால்நடை மருத்துவமனைக்கு துாக்கி சென்று, கருணாகரன் சிகிச்சை அளித்தார். பின், நுங்கம்பாக்கம் போலீசில் இது தொடர்பாக அவர் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜெயா, அவரது மகன்கள் தனசேகர், புருஷோத்தமன் ஆகியோர் மீது அஜாக்கிரதையாக நாய்கள் வளர்த்தல், அசம்பாவிதம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுள்ளனர்.

