/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரக்கோணம் தடத்தில் மின் ரயில் சேவை மாற்றம்
/
அரக்கோணம் தடத்தில் மின் ரயில் சேவை மாற்றம்
ADDED : ஆக 11, 2024 01:34 AM
சென்னை:ரயில்பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்ட்ரல் - அரக்கோணம் தடத்தில், எட்டு மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
சென்ட்ரல் - அரக்கோணம் காலை 9:10 மணி ரயில், வரும் 12, 14ம் தேதிகளில், திருவள்ளூர் வரை மட்டுமே இயக்கப்படும்
சென்ட்ரல் - திருத்தணி காலை 10:00 மணி ரயில், வரும் 12, 14ம் தேதி திருவள்ளூர் வரை மட்டுமே இயக்கப்படும்
சென்ட்ரல் - அரக்கோணம் காலை 11:00 மணி ரயில், வரும் 12, 14ம் தேதி திருவள்ளூர் வரை மட்டுமே இயக்கப்படும்
அரக்கோணம் - சென்ட்ரல் காலை 11:15, பகல் 12:00 மணி ரயில்கள், வரும் 12, 14ம் தேதிகளில் திருவள்ளூரில் இருந்து இயக்கப்படும்
திருத்தணி - சென்ட்ரல் பகல் 12:35 மணி ரயில் வரும், 12, 14ம் தேதிகளில் திருவள்ளூரில் இருந்து இயக்கப்படும்
வேலுார் கன்டோன்மென்ட் - அரக்கோணம் காலை 10:00 மணி ரயில், வரும் 12, 14ம் தேதிகளில் சித்தேரி வரை மட்டுமே இயக்கப்படும்
சென்ட்ரல் - திருப்பதி காலை 9:50 மணி ரயில் வரும், 12, 14ம் தேதிகளில் திருத்தணியில் இருந்து இயக்கப்படும்.
விடுமுறைகால சிறப்பு ரயில்கள்
சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு
தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும்
18, 25ம் தேதிகளில், இரவு 11:15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து
தாம்பரத்திற்கு மறுநாள் காலை 11:15 மணிக்கு வந்து சேரும் வகையில் சிறப்பு
ரயில் இயக்கப்படும்.
அதேபோல், 19, 26ம் தேதிகளில்
தாம்பரத்திலிருந்து மாலை 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள்
காலை 3:45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
திருநெல்வேலி - செங்கல்பட்டு சிறப்பு ரயில், திருநெல்வேலியிருந்து
வரும்
13, 18ம் தேதிகளில், திருநெல்வேலியில் இரவு 10:50 மணிக்கு புறப்பட்டு,
மறுநாள் காலை 11:00 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும் வகையில் சிறப்பு ரயில்
இயக்கப்படும். இதே ரயில், 14, 19ம் தேதிகளில், மாலை 5:55 மணிக்கு
செங்கல்பட்டிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5:50 மணிக்கு திருநெல்வேலி
சென்றடையும்.