/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மக்கர் லேப்டாப்' வழக்கு வாடிக்கையாளருக்கு இழப்பீடு
/
'மக்கர் லேப்டாப்' வழக்கு வாடிக்கையாளருக்கு இழப்பீடு
'மக்கர் லேப்டாப்' வழக்கு வாடிக்கையாளருக்கு இழப்பீடு
'மக்கர் லேப்டாப்' வழக்கு வாடிக்கையாளருக்கு இழப்பீடு
ADDED : ஆக 26, 2024 01:50 AM
சென்னை:சென்னை, இந்திரா நகரைச் சேர்ந்த கண்ணன் விஸ்வநாதன் என்பவர், மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
அடையாறு, டாக்டர் முத்துலட்சுமி சாலையில் ஐ.டி.வேர்ல்ட் இந்தியா பிரைவேட் என்ற நிறுவனம் உள்ளது. இங்கு, 2021 ஆக., 11ல், 92,499 ரூபாயில் 'ஹெச்.பி., பெவிலியன் 15 கேமிங்' லேப்டாப் வாங்கினேன். கூடுதல் 'வாரண்டி'க்கு 4,399 ரூபாய் செலுத்தினேன்.
இந்த நிலையில், லேப்டாப் பழுதானது. பழுதை சரிசெய்து தர தொழில்நுட்ப நிபுணர்களால் முடியவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைவர் பி.ஜிஜா, உறுப்பினர்கள் டி.ஆர்.சிவகுமார், எஸ். நந்தகோபாலன் அடங்கிய அமர்வு விசாரித்தது. பின் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் வாங்கிய லேப்டாப் வாரண்டி காலம், வரும் அக்., 8ம் தேதி வரை உள்ளது. பழுதை சரிசெய்ய, ஹெச்.பி., நிறுவன பிரதிநிதிகள் பல முறை முயன்றும், அதை சரிசெய்ய முடியவில்லை.
எனவே, பொருளுக்காக மனுதாரர் செலுத்திய 96,898 ரூபாயும், சேவை குறைபாடு, மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு 10,000 ரூபாயும் வழக்கு செலவாக 5,000 ரூபாயும், மனுதாரருக்கு எட்டு வாரத்துக்குள் ஹெச்.பி., நிறுவனம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.