ADDED : செப் 12, 2024 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழிங்கநல்லுார் மண்டலம், 195வது வார்டு, துரைப்பாக்கம், பல்லவன் தெருவில் காலி இடத்தில் கழிவுநீர் விடப்படுகிறது. அதில், புதராக வளர்ந்துள்ளதால் கழிவுநீர் நிரம்பி இருப்பது வெளியே தெரிவதில்லை. இதனால், துர்நாற்றம் வீசி சுவாச பிரச்னை ஏற்படுவதுடன், இரவில் துாக்கம் இல்லாமல் தவிக்கிறோம்.
கழிவுநீர் விடுவதை தடுக்க, மாநகராட்சி சுகாதார துறை, குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கழிவுநீர் விடுவதை தடுக்க, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜகோபால்,
துரைப்பாக்கம்