/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புகார் பெட்டி மழைநீர் வடிகால் அமைத்தும் பயனில்லை
/
புகார் பெட்டி மழைநீர் வடிகால் அமைத்தும் பயனில்லை
ADDED : செப் 10, 2024 12:44 AM
மழைநீர் வடிகால் அமைத்தும் பயனில்லை
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பருவமழைக்கு வெள்ளம் தேங்காத வகையில், மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
புதிதாக அமைக்கப்படும் இந்த மழைநீர் வடிகாலில் சிலர், சட்ட விரோதமாக கழிவுநீர் இணைப்பை கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, சிந்தாதிரிப்பேட்டை அருணாச்சலம் சாலையில், மழைநீர் வடிகாலில் சட்டவிரோதமாக, கழிவுநீர் இணைப்புகள் கொடுத்து வருகின்றனர். இதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால், புதிதாக மழைநீர் வடிகால் அமைத்தும், எந்த பயனும் இல்லை. மழைக்காலங்களில் பழையபடி, இச்சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பது உறுதி என, பகுதிவாசிகள் கூறுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகளை நீக்க வேண்டும்.
- கே.வர்ஷா, எழும்பூர்.