ADDED : ஜூன் 19, 2026 04:10 PM
அ நிறம் | அளவு
மூதாட்டியை மிரட்டிய ரவுடி கைது
திரு.வி.க.நகர்: திரு.வி.க.நகர் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி அலீஸ், 62. இவரது வீட்டருகே வசிக்கும் ரவுடி பிரேம்குமார், 39, அலீஸ் வீட்டின் முன் தன் ஆட்டோவை நிறுத்தி, கஞ்சாவை புகைப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
அலீஸ் தட்டிக்கேட்டபோது, வீண் தகராறு செய்த ரவுடி பிரேம்குமார், கொலை மிரட்டல் விடுத்தார். அலீஸ் புகாரையடுத்து, திரு.வி.க.நகர் போலீசார் பிரேம்குமாரை நேற்று கைது செய்தனர்.
