ADDED : ஜூன் 19, 2026 04:11 PM
அ நிறம் | அளவு
பெண் கஞ்சா வியாபாரி சரண்
புளியந்தோப்பு: புளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதியில் கஞ்சா விற்றதாக கடந்தாண்டு ஜூலை 11ல் ராகவன் என்பவர் கைது செய்யப்பட்டார்; 85 கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. இவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி, ஷர்மிளா, கஞ்சா வியாபாரி தட்டான்குளம் பானுமதி, 40, ஆகியோர் இருந்தனர்.
இதில், ஷர்மிளா முன்ஜாமின் பெற்றார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பானுமதி, போதை பொருள் தடுப்பு பிரிவு முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில், பானுமதி நேற்று சரண் அடைந்தார்.
நீதிபதி அவரை, ஜூலை 2 வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். மருத்துவ பரிசோதனைக்கு பின் பானுமதி புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
