தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்


ADDED : ஜூலை 19, 2026 07:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2026 07:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த முஸ்தாகிம், 21, பெரியமேடு பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை நடந்து சென்றார். அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாய் பறித்த சூர்யாவை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

––––

* கிண்டி, மசூதி காலனியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் எட்வின் ராஜ், 57, தனியாக வசித்து வந்தார். அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, கதவை உடைத்து பார்த்தபோது, அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். விஷமருந்தி தற்கொலை செய்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.

–––

* விருகம்பாக்கம் இந்திரா நகரில் ராமசந்திரன், 41, திருமூர்த்தி, 30, மகேந்திரன், 33, ஆகியோர், மொபைல் போன் வாயிலாக, வெளி மாநில லாட்டரி எண்களை ஆன்லைனில் பதிவு செய்து விற்றுவந்தனர். போலீசார், மூவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

––

* வானகரம், துண்டலம் பகுதியைச் சேர்ந்த கார்பென்டர் அக்பர் பாஷா, 48, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜெயசந்திரன், 35, ஆகியோருக்கும், வீட்டுக்கான பாதையை பயன்படுத்துவதில் தகராறு ஏற்பட்டது.

கடந்த 17ல், வீட்டின் முன் படுத்திருந்த அக்பர் பாஷாவின் கழுத்தை, ஜெயசந்திரன் கத்தியால் அறுத்தார். அக்பர் பாஷா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். வானகரம் போலீசார், ஜெயசந்திரனை கைது செய்தனர்.

––

* புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பில், சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்ற ஆரோக்கிய மேரியை, 32, கைது செய்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார், 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

--––

* எம்.கே.பி.நகரில், கடந்த 8ம் தேதி, வலி நிவாரண மாத்திரைகளை போதைக்கு விற்ற வழக்கில் முகேஷ், சஞ்சய், விஷால், கரண், கிஷோர்குமார் உள்ளிட்ட ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த அசோக்குமார், 19, கவுதம், 19, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us