/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏகாம்பரர் கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
/
ஏகாம்பரர் கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
ஏகாம்பரர் கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
ஏகாம்பரர் கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
ADDED : மே 07, 2024 12:17 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் குளத்தில் ஏராளமான சிறிய வகை மீன்களும், 10க்கும் மேற்பட்ட பெரிய வகை மீன்களும் உள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள், அரிசி பொரிகளை மீன்களுக்கு உணவாக வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், சில நாட்களாக காஞ்சிபுரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், கோடை வெப்பத்தை தாக்குபிடிக்க முடியாமல், குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன.
இறந்த மீன்களை, காக்கைகள் கொத்திச் செல்வதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், குளத்தில் புறா ஒன்றும் இறந்து கிடப்பதால், குளத்து நீர் மாசடையும் சூழல் உள்ளது.
எனவே, குளத்தில் செத்து மிதக்கும் புறாவையும், மீன்களையும் அகற்ற, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.