/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆவடியில் டெங்கு 6 பேர் ' அட்மிட் '
/
ஆவடியில் டெங்கு 6 பேர் ' அட்மிட் '
ADDED : ஆக 25, 2024 12:08 AM
ஆவடி, ஆவடியில் ஒரே நாளில் ஆறு பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆவடி அடுத்த பட்டாபிராம், கோபாலபுரம் மேற்கு, நான்காவது தெருவைச் சேர்ந்த 41 வயது நபர், ஐந்து நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரது 17 மற்றும் 9 வயது மகள்கள் இருவருக்கும் டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே பகுதியில் வசிக்கும் 30 வயது இளம் பெண் மற்றும் அவரது 2 வயது மகளும் டெங்கு வால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், ஆவடி, சேக்காடு, அண்ணா நகரில், 8 வயது சிறுவன் டெங்கு வால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்த ஆவடி மாநகராட்சி அதிகாரிகள், கோபாலபுரம் பகுதியில், பாழடைந்த வீட்டில், பிளாஸ்டிக் பக்கெட்டில்தேக்கி வைக்கப்பட்டு இருந்த தண்ணீரை கொட்டி, குப்பைகளை அகற்றி, மருந்துகள் தெளித்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

