/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அதிகாரிகள் பற்றாக்குறையால் பணி அரைகுறை பெரும்பாக்கம் குடியிருப்புவாசிகள் அதிருப்தி
/
அதிகாரிகள் பற்றாக்குறையால் பணி அரைகுறை பெரும்பாக்கம் குடியிருப்புவாசிகள் அதிருப்தி
அதிகாரிகள் பற்றாக்குறையால் பணி அரைகுறை பெரும்பாக்கம் குடியிருப்புவாசிகள் அதிருப்தி
அதிகாரிகள் பற்றாக்குறையால் பணி அரைகுறை பெரும்பாக்கம் குடியிருப்புவாசிகள் அதிருப்தி
ADDED : மே 02, 2024 12:33 AM
சென்னை, செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில், 27,212 வீடுகள் உள்ளன. தமிழகத்தில், வாரியத்தின் கீழ் உள்ள அதிக குடியிருப்புகள் உடைய பகுதி இது தான்.
இரண்டடுக்கு உடைய செம்மஞ்சேரியில் 870 பிளாக்குகளாக பிரித்து, 6,764 கட்டப்பட்டு உள்ளன. எட்டடுக்கு உடைய பெரும்பாக்கத்தில், 181 பிளாக்குகளாக பிரித்து, 20,448 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த வீடுகள், வாரிய பொறியாளர்களை கொண்டு பராமரிக்கப்படுகிறது.
அதேபோல், இங்குள்ள மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்த, சமுதாய வளர்ச்சி பிரிவு செயல்படுகிறது. ஆனால், பொறியாளர்கள், ஊழியர்கள் பற்றாக்குறையால் பராமரிப்பு பணி செய்ய முடியாமல், வாரியம் திணறுகிறது.
மொத்த வீடுகளை பராமரிக்க, 10 இளநிலை பொறியாளர்கள் வேண்டும். ஆனால், ஐந்து பேர் மட்டுமே உள்ளனர். உதவி நிர்வாக பொறியாளர்கள் ஐந்து பேருக்கு மூவர் மட்டுமே உள்ளனர்.
நிர்வாக பொறியாளர் அலுவலகத்தில் ஊழியர்களின் பற்றாக்குறையால், அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
அதேபோல், சமுதாய வளர்ச்சி பிரிவில், மூன்று அதிகாரிகள் இருந்தனர். தற்போது, ஒருவர் தான் உள்ளார். களப்பணியாளர்களுக்கு, அவர்களுக்கு ஒதுக்கிய பணியை தவிர, இதர பணிகள் செய்ய வலியுறுத்துவதால், அவர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது.
மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த தேவையான அதிகாரிகள் இல்லாமல், சமுதாய வளர்ச்சி பிரிவு திணறுகிறது.
இது குறித்து, வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
அதிக மக்கள் வசிக்கும் பகுதியாக பெரும்பாக்கம், செம்மஞ்சேரி உள்ளது. புதிதாக, 3,500 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
சில மாதங்களுக்கு முன், வாரியத்தில் இருந்து, பொறியாளர்கள், வரி வசூலிப்பாளர்கள், சமுதாய வளர்ச்சி பிரிவில் அதிகாரிகளாக புதிதாக நியமிக்கப்பட்டனர்.
ஆனால், இங்குள்ள பற்றாக்குறையை போக்கும் வகையில் பொறியாளர்கள், அதிகாரிகள் நியமிக்கவில்லை. இதனால், அன்றாடம் பணிகள் பாதிக்கப்படுகின்றன.
விடுமுறை நாளில் கூட பணி செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறோம். பணிச்சுமையை கருத்தில் கொண்டு, காலி இடங்களை நிரப்ப, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

