/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இ.சி.ஆரில் மேம்பால 4 வழி சாலை ஒரு மாதத்தில் திட்ட அறிக்கை
/
இ.சி.ஆரில் மேம்பால 4 வழி சாலை ஒரு மாதத்தில் திட்ட அறிக்கை
இ.சி.ஆரில் மேம்பால 4 வழி சாலை ஒரு மாதத்தில் திட்ட அறிக்கை
இ.சி.ஆரில் மேம்பால 4 வழி சாலை ஒரு மாதத்தில் திட்ட அறிக்கை
ADDED : ஆக 20, 2024 12:43 AM

சென்னை, இ.சி.ஆரில் திருவான்மியூர் முதல் அக்கரை வரை, 10.5 கி.மீ., துாரம் ஆறுவழி சாலையாக மாற்றும் பணி நடக்கிறது. இந்நிலையில், சாலை மைய பகுதியில் நான்கு வழி உயர்மட்ட பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
ஆறுவழி சாலை பணியை வேகப்படுத்தும் ஆய்வு கூட்டம், அமைச்சர் வேலு தலைமையில், அக்கரை சந்திப்பில் சாலையோரம் கூடாரம் அமைத்து நேற்று நடந்தது.
இதில், நெடுஞ்சாலைத் துறை செயலர் செல்வராஜ், சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே மற்றும் பல துறை பொறியாளர்கள் பங்கேற்றனர். நிலம் கையகப்படுத்துவது, குடிநீர் குழாய், மின் கேபிள், மின் பகிர்மான பெட்டி அகற்றுவது தொடர்பாக ஆலோசனை நடந்தது.
வருவாய் துறையினர், நிலம் கையகப்படுத்த கூடுதலாக தாசில்தார் குழு தேவை என கேட்டனர். இதற்கு, தாசில்தார் தலைமையில் கூடுதலாக ஒரு குழு அமைத்துக்கொடுங்கள் என, செயலர், கலெக்டருக்கு உத்தரவிட்டார்.
நிலம் கையகப்படுத்தும் பணியை, செப்., 10ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என கூறியதுடன், இதர துறை அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
பின், அமைச்சர் பேசியதாவது:
சென்னையின் முக்கிய சாலையாக இ.சி.ஆர்., உள்ளது. கடந்த 2009ல் ஆறுவழி சாலையாக விரிவாக்க பணி துவங்கியது. சாலை விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த, 940 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, தற்போது, 60 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.
மின் வாரியம், குடிநீர் வாரியம் ஒருங்கிணைப்புடன் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டி உள்ளது. பணியை விரைந்த முடிக்க, 10 நாட்களுக்கு ஒருமுறை இதர துறைகளுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஆறுவழி சாலை பயன்பாட்டுக்கு வந்ததும், நெரிசல் குறையும். எட்டு வழி சாலையாக மாற்ற பரிந்துரை இருந்தது. இதற்கு நிலம் கையகப்படுத்தும்போது, வியாபாரிகள், பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு எழும்.
இதனால், நான்கு வழி உயர்மட்ட சாலை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக, தனியார் நிறுவனத்திடம் திட்ட அறிக்கை கேட்டுள்ளோம். இந்த பணி ஒரு மாதத்தில் முடியும். இதன் வாயிலாக, இ.சி.ஆரில் தரையில் ஆறுவழி, மேம்பாலத்தில் நான்குவழி என, 10 வழி சாலையாக மாறும்.
பருவமழையால் காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. தடை இல்லாத வகையில், பணி நடக்கும். அண்ணா சாலையில் இரும்பு மேம்பால பணிக்கு மண் பரிசோதனை நடக்கிறது. கீழே மெட்ரோ ரயில் பாதை உள்ளதால், அதற்கு ஏற்ப வடிவமைப்பு செய்து உள்ளோம்.
வரும் 2025 டிச., மாதத்திற்குள், அண்ணா சாலை மேம்பாலம் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.