/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரம் சுரங்கப்பாதையில் மீண்டும் சமூக விரோத செயல்களால் அச்சம்
/
தாம்பரம் சுரங்கப்பாதையில் மீண்டும் சமூக விரோத செயல்களால் அச்சம்
தாம்பரம் சுரங்கப்பாதையில் மீண்டும் சமூக விரோத செயல்களால் அச்சம்
தாம்பரம் சுரங்கப்பாதையில் மீண்டும் சமூக விரோத செயல்களால் அச்சம்
ADDED : ஜூலை 02, 2024 12:30 AM

தாம்பரம், தாம்பரத்தில், மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளைச் சேர்ந்தோர், நடுவே செல்லும் ரயில்வே தண்டவாளத்தை கடப்பதை தடுக்க, ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.
ஜி.எஸ்.டி., சாலையில் இந்து மிஷன் மருத்துவமனை எதிரே உள்ள இப்பாதை, ஆரம்பத்தில் முறையாக பராமரிக்கப்பட்டு, பாதசாரிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது.
நாளடைவில் மோசமானதால், சமூக விரோத செயல்கள் நடக்கும் பகுதியாக மாறியது. விபசாரம், செயின் பறிப்பு, வழிப்பறி போன்ற குற்றங்கள் அதிகமாக நடந்தன. இதனால், இரவில் செல்ல மக்கள் அச்சப்பட்டதால், சுரங்க நடைபாதை மூடப்பட்டது.
பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த சுரங்க நடைபாதையை சீரமைத்து, சில மாதங்களுக்கு முன் திறந்தனர்.
சமூக விரோத செயல்கள் நடப்பதை தடுக்க காலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்றும், இரவில் பூட்டப்படும் என்றும், ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.
ஆனால் தற்போது, இச்சுரங்க நடைபாதை பராமரிப்பின்றி காணப்படுகிறது.
இதனால், மதுபாட்டில் உடைப்பு, கஞ்சா விற்பனை போன்ற சமூக விரோத செயல்கள் மீண்டும் அரங்கேறுவதால், இப்பாதையை பயன்படுத்த பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
சுரங்கப்பாதையை சுத்தம் செய்து, மக்களின் பயத்தை போக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.