/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோ - ஆப் டெக்ஸில் 'பேஷன் ஷோ' பெண் வாடிக்கையாளர்கள் பங்கேற்பு
/
கோ - ஆப் டெக்ஸில் 'பேஷன் ஷோ' பெண் வாடிக்கையாளர்கள் பங்கேற்பு
கோ - ஆப் டெக்ஸில் 'பேஷன் ஷோ' பெண் வாடிக்கையாளர்கள் பங்கேற்பு
கோ - ஆப் டெக்ஸில் 'பேஷன் ஷோ' பெண் வாடிக்கையாளர்கள் பங்கேற்பு
ADDED : மார் 09, 2025 01:16 AM

சென்னை, மகளிர் தினத்தையொட்டி, கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில், இன்று வாங்கும் பொருட்களுக்கும், 30 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம் சார்பில், பெண் வாடிக்கையாளர்களுக்கு, 30 சதவீதம் தள்ளுபடியுடன் கூடிய, 'பேஷன் ஷோ' நேற்று சென்னையில் நடந்தது. தொடர்ந்து, 20 ஆண்டுகளாக, கோ - ஆப்டெக்ஸில் கைத்தறி ரகங்களை வாங்கிய, 15 பெண் வாடிக்கையாளர்கள், போட்டியில் பங்கேற்றனர்.
அவர்கள், பாரம்பரிய கைத்தறி ரகங்கள், இன்டோ வெஸ்டர்ன் சாரிஸ், மடிப்பு சேலை உள்ளிட்ட ரகங்களை உடுத்தியவாறு, பேஷன் ஷோவில் பங்கேற்றனர். சிலர் பாரம்பரிய நெசவு முறையில் நெய்த, சேலை ரகங்களை உடுத்தி, பார்வையாளர்களை கவர்ந்தனர். சிறப்பாக செயல்பட்ட மூன்று பெண் வாடிக்கையாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கு கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம் சார்பில், 20,000 ரூபாய் மதிப்பிலான கைத்தறி புடவைகள் பரிசாக வழங்கப்பட்டன.
தமிழகத்தில் உள்ள அனைத்து கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும், பொதுமக்கள் வாங்கும் பொருட்களுக்கு, இன்றும், 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.