/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஒர்க் ஷாப்'பில் தீ விபத்து 23 பைக்குகள் எரிந்து நாசம்
/
'ஒர்க் ஷாப்'பில் தீ விபத்து 23 பைக்குகள் எரிந்து நாசம்
'ஒர்க் ஷாப்'பில் தீ விபத்து 23 பைக்குகள் எரிந்து நாசம்
'ஒர்க் ஷாப்'பில் தீ விபத்து 23 பைக்குகள் எரிந்து நாசம்
ADDED : பிப் 27, 2025 11:54 PM

மடிப்பாக்கம், சென்னையை அடுத்த கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சையத் இலியாஸ், 45. இவர், உள்ளகரம், ராஜகோபாலன் தெருவில், 20 ஆண்டுகளாக இரு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை, கடையிலிருந்து திடீரென கரும்புகை வெளியானது. இதைப்பார்த்த அப்பகுதிவாசிகள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வேளச்சேரி தீயணைப்பு துறையினர், 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில், பழுது பார்க்க வந்த, 23 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து, மடிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.