/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை - திருப்பதி உட்பட நான்கு ரயில்கள் ரத்து
/
சென்னை - திருப்பதி உட்பட நான்கு ரயில்கள் ரத்து
ADDED : ஆக 28, 2024 12:35 AM
சென்னை, அரக்கோணம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணியால், சென்னை சென்ட்ரல் - திருப்பதி உட்பட நான்கு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்ட்ரல் - திருப்பதி காலை 9:50 மணி ரயில் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுகிறது.
திருப்பதி - சென்ட்ரல் மதியம் 1:35 மணி ரயில் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுகிறது.
சென்ட்ரல் - திருப்பதி காலை 10:10 மணி, திருப்பதி - சென்ட்ரல் மதியம் 2:25 மணி ரயில்கள், வரும் செப்., 1ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.
அரக்கோணம் யார்டில் மேம்பாட்டு பணி நடக்க உள்ளதால், இன்றும், நாளையும் இந்த தடத்தில் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஒரு பகுதி ரத்து
கோவை - சென்ட்ரல் காலை 6:20 இன்டர்சிட்டி விரைவு ரயில் வரும் செப்., 1ம் தேதி காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும்.
சென்ட்ரல் - கோவை மதியம் 2:35 மணி இன்டர்சிட்டி விரைவு ரயில் வரும் செப்., 1ம் தேதி காட்பாடியில் இருந்து இயக்கப்படும்.
மைசூர் - சென்ட்ரல் அதிகாலை 5:00 மணி ரயில், வரும் 1ம் தேதி காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும்.
சென்ட்ரல் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு மாலை 3:30 மணி விரைவு ரயில் வரும் செப்., 1ம் தேதி காட்பாடியில் இருந்து இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொச்சுவேலி ரயில்
சென்னை சென்ட்ரலில் இருந்து வாரந்தோறும் புதன் கிழமைகளில், மாலை 3:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8:30 மணிக்கு கொச்சுவேலி செல்லும்.
இந்த சிறப்பு ரயில், இன்று மற்றும் செப்., 4, 11, 18, 25ம் தேதிகளில் நீட்டித்து இயக்கப்பட உள்ளது.
கொச்சுவேலியில் இருந்து வாரம்தோறும் வியாழக் கிழமைகளில், மாலை 6:25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 11:25 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும்.
இந்த ரயில், வரும் 29, செப்., 5, 12, 19, 26ம் தேதிகளில் நீட்டித்து இயக்கப்படும். முன்பதிவு துவங்கி உள்ளது.