/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தனியார் ஊழியரிடம் ரூ.72,000 மோசடி
/
தனியார் ஊழியரிடம் ரூ.72,000 மோசடி
ADDED : ஜூன் 28, 2024 12:25 AM
ராமாபுரம், ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல், 35; தனியார் நிறுவன ஊழியர்.
இவரது மொபைல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், பல்வேறு சட்ட விரோத செயல்களில் கோகுல் ஈடுபட்டு வருவதாக, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திலிருந்து புகார் வந்துள்ளதாக கூறியுள்ளார்.
அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, பணம் அனுப்ப வேண்டும் எனக் கூறி உள்ளார்.
பதறிப்போன கோகுல், மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு 72,000 ரூபாய் அனுப்பினார்.
தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் சந்தேகமடைந்த கோகுல், அந்த நபரை தொடர்பு கொண்ட போது, அந்த மொபைல்போன் எண்,'சுவிட்ச் ஆப்' என வந்துள்ளது.
தான் ஏமாற்றப்பட்டது தெரிந்ததால், ராமாபுரம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.