/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சி பள்ளிகளில் பிரெஞ்சு மொழி
/
மாநகராட்சி பள்ளிகளில் பிரெஞ்சு மொழி
ADDED : ஆக 30, 2024 12:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை மாநகராட்சி மற்றும் அலையன்ஸ் பிரான்சைஸ் நிறுவனம் சார்பில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிரெஞ்சு மொழி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதற்காக, மேயர் பிரியா மற்றும் பிரான்ஸ் துாதரக துணைத்துாதர் லிஸ்தால்போட்பாரே ஆகியோர் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
முதற்கட்டமாக, மார்க்கெட் தெரு, சைதாப்பேட்டை, திருவான்மியூர், படேல் நகர் ஆகிய நான்கு, மாநகராட்சி பள்ளிகளில், தலா 20 மாணவ - மாணவியருக்கு, விருப்ப பாடமாக பிரெஞ்சு மொழி வகுப்புகள் முன்னோடி திட்டமாக துவக்கப்பட உள்ளன.
இந்நிகழ்ச்சியில், துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

