/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அகற்றப்படாத குப்பை அண்ணா நகரில் சீர்கேடு
/
அகற்றப்படாத குப்பை அண்ணா நகரில் சீர்கேடு
ADDED : மே 29, 2024 12:15 AM

அண்ணா நகர், அண்ணாநகரில், குடியிருப்பின் மத்தியில் குவிந்துள்ள குப்பை பல நாட்களாக அகற்றப்படாமல் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
சென்னை, அண்ணா நகர் மண்டலம், 99வது வார்டில், திருமங்கலம் அருகில், மேற்கு அண்ணா நகர் பகுதி உள்ளது. இங்குள்ள இமயம் காலனியில் ஏராளமான தெருக்களில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர்.
இப்பகுதியில், முதலாவது தெருவில் குடியிருப்புகள் மத்தியில், மாநகராட்சியின் குப்பைத் தொட்டி உள்ளது.
இங்குள்ள குப்பைத் தொட்டியில் சேகரமாகும் குப்பையை, முறையாக அகற்றுவதில்லை.
இதனால், சாலையோரத்தில் பல நாட்களாகவே குப்பை தேங்கியுள்ளது. இதன் காரணமாக, அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் நிலவுகிறது.
அப்பகுதியில் வசிப்பவர்கள் கூறியதாவது:
அண்ணா நகர் மேற்கு பகுதியில், மாநகராட்சி முறையாக குப்பையை கையாளுவது கிடையாது. பல நாட்களாக குப்பை அகற்றப்படாமல் இருப்பதால், நோய் தொற்றும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, குப்பையை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.