/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வார்டுக்கு வெளியே துாங்கியவர்கள் ஓய்வறையில் தங்க கலெக்டர் கரிசனம்
/
வார்டுக்கு வெளியே துாங்கியவர்கள் ஓய்வறையில் தங்க கலெக்டர் கரிசனம்
வார்டுக்கு வெளியே துாங்கியவர்கள் ஓய்வறையில் தங்க கலெக்டர் கரிசனம்
வார்டுக்கு வெளியே துாங்கியவர்கள் ஓய்வறையில் தங்க கலெக்டர் கரிசனம்
ADDED : ஆக 29, 2024 12:41 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், கலெக்டர் கலைச்செல்வி நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில், திடீர் ஆய்வு செய்தார்.
அவசர சிகிச்சை பிரிவிலுள்ள வசதிகள் பற்றியும், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை பற்றியும், மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து, மகப்பேறு வார்டுக்கு வெளியே ஆய்வு செய்த போது, அங்கு நோயாளிகளின் உறவினர்கள் படுத்திருந்தனர். இதைக் கண்ட கலெக்டர், 'நோயாளிகளின் உடன் வருவோர் தங்க வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு ஏன் தங்குகிறீர்கள்' எனக் கேட்டு, 'ஓய்வு கட்டடத்தில் பாதுகாப்பாக தங்க வேண்டும்' என அறிவுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து, புறநோயாளிகள் சீட்டு வழங்குமிடம், உள்நோயாளிகள் வார்டுகளையும் பார்வையிட்டார். மருத்துவமனை பதிவேடுகளை சரிபார்த்து, அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
ஆய்வின் போது, மாவட்ட எஸ்.பி., சண்முகம் மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.