/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறைவாசிகள் தயாரித்த பொருட்களுக்கு வரவேற்பு
/
சிறைவாசிகள் தயாரித்த பொருட்களுக்கு வரவேற்பு
ADDED : செப் 03, 2024 12:32 AM

சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நடமாடும் வாகனத்தில் வைக்கப்பட்டுள்ள, சிறைவாசிகளால் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை சார்பில், ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் மாதம் ஒரு நாள், தண்டனை சிறைவாசிகளால் தயாரிக்கப்பட்ட பொருட்கள், விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி நேற்று, சென்னை கமிஷனர் அலுவலக வளாகத்தில், சிறைவாசிகளால் தயாரிக்கப்பட்ட பொருட்கள், நடமாடும் வாகனத்தில் விற்பனை செய்யப்பட்டன.
இதுகுறித்து விற்பனையாளர் கூறியதாவது:
தண்டனை சிறைவாசிகளால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும், சிறந்த தரத்தில் குறைந்த விலையில் விற்கப்படுவதால், அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
இங்கு நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், தோலில் செய்யப்பட்ட பெல்ட், ஷூ, ரெடிமேட் ஆடைகள், இட்லி பொடி, ஊறுகாய், போர்வை, மிதியடி, வீடு சுத்தம் செய்ய பயன்படும் திரவங்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.
விற்பனையிலிருந்து கிடைக்கும் பணம் அனைத்தும், சிறைவாசிகள் நலனுக்காக செலவிடப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.