/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆவடியில் 31 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
/
ஆவடியில் 31 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
ADDED : ஆக 27, 2024 12:16 AM
ஆவடி, ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது, கமிஷனர் சங்கர் உத்தரவுப்படி, குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி, கொலை வழக்கில் தொடர்புடைய 19 பேர், ஒரு ரவுடி, கொள்ளை மற்றும் திருட்டு வழக்கில் நான்கு பேர், போதைப்பொருள் வழக்கில் ஆறு பேர், நில அபகரிப்பு வழக்கில் ஒருவர் உட்பட, 31 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆவடி, முத்தாபுதுபேட்டை காவல் நிலைய நகைகடைக் கொள்ளை வழக்கில் சிக்கிய மூன்று பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
சென்னையில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுவோரை, போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்படி, போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர். அதன்படி கடந்த, 7 நாட்களில், வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த 23 பேரை, போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.