/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.3 லட்சம் மதிப்பு குட்கா ஆவடியில் பறிமுதல்
/
ரூ.3 லட்சம் மதிப்பு குட்கா ஆவடியில் பறிமுதல்
ADDED : செப் 06, 2024 12:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடி, திருமுல்லைவாயில் போலீசார், அயப்பாக்கம் அபர்ணா நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த குஜராத் பதிவெண் கொண்ட 'ஹூண்டாய் கிரீட்டா' காரை மடக்கி சோதனை செய்த போது, 3 லட்சம் மதிப்புள்ள 100 கிலோ குட்கா பொருட்கள் இருந்தன.
விசாரணையில், பெங்களூரில் இருந்து குட்கா கடத்தி வந்தது, ராஜஸ்தான் மாநிலம், சஞ்சோர் மாவட்டத்தைச் சேர்ந்த தீபா ராம், 23, மற்றும் மனோகர் லால், 34, என தெரிந்தது.
குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.