/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வண்ணையில் மாநகராட்சி கடைகள் குப்பை கிடங்காக மாறும் அவலம்
/
வண்ணையில் மாநகராட்சி கடைகள் குப்பை கிடங்காக மாறும் அவலம்
வண்ணையில் மாநகராட்சி கடைகள் குப்பை கிடங்காக மாறும் அவலம்
வண்ணையில் மாநகராட்சி கடைகள் குப்பை கிடங்காக மாறும் அவலம்
ADDED : ஆக 07, 2024 01:02 AM

வண்ணாரப்பேட்டை,வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், பார்த்தசாரதி மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம், கடந்த 1967ல் காமராஜர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது.
மேம்பாலத்தில் பல பகுதிகள் விரிசல் விழுந்தும், சிமென்ட் பூச்சு பெயர்ந்தும் அபாயகரமான நிலையில் இருந்தது. இதையடுத்து, சென்னை மாநகராட்சி கடந்த 2009ல், 11 லட்சம் ரூபாய் செலவில் பாலத்தை சீரமைத்தது.
அதன்பின் கண்டுகொள்ளப்படவில்லை. இதனால் மீண்டும் மோசமடைந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல்,
மேம்பாலத்தின் அடிப்புறத்தில் 10க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை, வாடகை அடிப்படையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாநகராட்சி கொடுத்துள்ளது.
இதில் பயன்படுத்தப்படாமல் மோசமான நிலையில் உள்ள கடைகளில் தற்போது கட்டட கழிவுகளும் குப்பையும் கொட்டப்பட்டு உள்ளன. விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மர்ம நபர்கள் மது குடிப்பது, கஞ்சா புகைப்பது என, இரவு நேரத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். பெண்கள் இரவு நேரத்தில் இப்பகுதியில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது என, அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.